பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

- _ =மறவர் சீமை

கும்பெனியாருக்கு எதிரான போர் ஆயத்தங்கள் நடைபெறுவதையும் உறுதி செய்தன, சிவகெங்கைப் பிரதானிகள் கும்பெனியாரது நண்பர்களாக இருந்த காலம் மலையேறி விட்டது. நேரிலும், கடிதங்களிலும் அவர்கள் முன்பு நண்பர்களாகக் காட்டிக் கொள்வதெல்லாம் வெறும் பிாவனை பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையைக் காண்பிக்கும் ஏமாற்று வேலை. கலகக்காரன் மயிலப்பன் சேர்வைக்கும் சிவகெங்கைக்கும் சம்பந்தம் இல்லாதது போன்ற பொய்த் தோற்றத்தை மருது சகோதரர்களே அவனுக்கு ஆதரவும், உதவியும் அளித்து வருகின்றனர்.............. இப்பொழுது கும்பெனியாரது எதிரி மயிலப்பன் சேர்வைக்காரர் மட்டுமல்ல! சிவகெங்கைப் பிரதானிகள் மருது சேர்வைக்காரர்களும்தான்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

தனது விபரமான அறிக்கையை கலெக்டர் சென்னைக் கோட்டையில் உள்ள தலைமைக்கு அனுப்பி வைத்தார்.

தமிழ்நாட்டில் கும்பெனியாருக்கு நேர்முக எதிரி பாஞ்சாலக்குறிச்சி பாளையக்காரர் ஊமைத்துரையும், மறவர் சீமை மயிலப்பன் சேர்வைக்காரரும். மறைமுக எதிரி சிவகெங்கைப் பிரதானிகள். முதலில் பாஞ்சாலக்குறிச்சி பாளையக்காரரை அழிப்பது. அவர்களது மானப் பிரச்சினை. அவர்களது அரசியல் ராஜ தந்திரத்திற்கும், ஆயுத வலிமைக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான சவால். அத்துடன் மூன்று எதிரிகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பதைவிட ஒவ்வொருவராக ஒழித்துக் கட்டுவதுதான் எல்லா வகையிலும் ஏற்றதாக இருக்கும் என்பது கும்பெனியாரது தலைமையின் முடிவாக இருந்தது.

பாஞ்சைக் கோட்டைத் தாக்குதலுக்கான திட்டங்கள், ஆயுத குவிப்பு, அதனை நிறைவேற்ற ஆற்றலும், சூழ்ச்சியும் மிக்க தலைமைத் தளபதி பற்றிய தேர்வு. இரகசிய முடிவுகள்.