பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்

73

11. கிளர்ச்சிகளின் தொடர்ச்சி

சாலைக்கிராமம்.

பரமக்குடிக்கு வடகிழக்கே பத்துகல் தொலைவில் அமைந்துள்ள சிற்றுார். வளமையான பகுதி. சாலி கிராமம் என்ற முந்தைய பெயர் திரிந்து சாலைக் கிராமமாக மாறிவிட்டது. சாலி என்ற சொல் நெல் என்று பொருள். நெல்வயல் நிறைந்த ஊராகும். இங்கு வரகுண ஈஸ்வரர் சுவாமிக்கு திருக்கோவில் உள்ளதால் கி.பி.9வது நூற்றாண்டில் மதுரை வரகுண பாண்டியன் காலத்தில் இந்த ஊர் சிறப்புற்று இருந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஊரில் கி.பி.10ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாண்டியர் கால துகவுர் கூற்றத்தில் அமைந்து இருந்த ஊர். இராமநாதபுரம் மன்னரது பதினேழு வட்டங்களில் ஒன்றான இராஜசிங்கமங்கலம் வட்டத்தைச் சேர்ந்ததாக இருந்தது.

சேதுபதி மன்னரது ஆட்சியில் இங்கு வட்ட அலுவலகம் ஒன்று இருந்தது. அதனை அப்பொழுது கும்பெனிச் சிப்பந்திகள் நிர்வாகம் செய்து வந்தனர். தெளிச்சாத்த நல்லூரிலிருந்து வந்த மயிலப்பன் அணியினர் இங்குள்ள ஊர்ப்பொதுவில் தங்கினர். மறுநாள்

51. MDR Vol 1138 dated 20.03.1801.