பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{*= - மறவர் சீமை

நிலம் தெளிந்த விடியலில் அந்தக் கிராமத்தில் கும்பெனியாரது கச்சேரியை எரியூட்டி அழித்தனர். சேகரம் பட்டறையில் இருப்பில் இருந்த நெல்லையும், மற்றும் சில ஆடு, மாடுகளையும் கைப்பற்றிச் சென்றனர்., அடுத்த நாள் வடகிழக்கே ராஜசிங்கமங்கலம் கண்மாயின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள வரவணி, செங்குடி, கொக்கூரணி கிராமங்களில் கும்பெனிக்கு ஆதரவாளர்களது சொத்துக்களைத் தீயிட்டு அழித்தனர். கார்த்திகை மாதம் நடத்தப்பெறும் சூரசம்ஹாரத்தின் பொழுது சுடர்விட்டு எரியும் சொக்கப்பனையாக வீடுகளும், வைக்கோல் போர்களும் சேகரம் பட்டறைகளும் எரிந்து அழிந்தன. பின்னர் மேற்கே பரத்தைவயல் சென்றனர். இந்த ஊர் கி.பி.1735க்கும் 1740 ஆண்டுகளில் இராமநாதபுரத்தை ஆட்சி செய்த குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி என்ற மன்னரால் நைனார் கோவிலில் குடிகொண்டு இருக்கும் நாகநாதசுவாமியின் பெயரில் பல தனிப் பாடல்களை இயற்றிய நல்லமுத்துப்பிள்ளைப் புலவருக்கு சர்வமான்யமாக வழங்கப்பட்ட ஊராகும். அந்த புலவரது சமாதி அந்த ஊரின் வடமேற்கு பகுதியில் அமைந்து உள்ளது. இங்கும் கும்பெனியார் சேகரித்து வைத்து இருந்த பெருமளவிலான நெல்லைக் கொள்ளையிட்டு அதனைச் சிவகெங்கைச் சீமையில் பத்திரமான இடமொன்றுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதே நேரத்தில் இன்னும் தென்மேற்கே நெட்டுரில் நிலைகொண்டிருந்த பரங்கியர் அணியைச் சிவகெங்கைப் பிரதானிகளது மக்கள் தலைமையிலான அணி, தாக்கி, அங்கிருந்து பரமக்குடிக்குத் துரத்தியடித்த செய்தியும் சாலைக்கிராமம் கச்சேரி மயிலப்பனால் அழிக்கப்பட்ட செய்தியும் இராமநாதபுரம் கோட்டைக்கு எட்டியது. உதவி கலெக்டர் மில்லர் புதிய அணிகளுடன் சாலைக்கிராமம் பகுதிக்கு விரைந்து வந்தான். மயிலப்பன் இராஜசிங்கமங்கலம் பகுதியில் செட்டிக்கோட்டை என்ற கிராமத்தை அழித்துக் கொள்ளைப் பொருட்களைப் பத்திரமான இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும்பொழுது மில்லரது அணி

52. Trirunelveli District Records - vol 1357 at 20.03.1801