பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- =மறவர் சிமை

12. தலைக்குமேல் வந்த

வெள்ளம்

சிவகெங்கைப் பிரதானிகளுக்கும் சித்திரங்குடி சேர்வைக்காரருக்கும் இடையில் ஏற்பட்ட நல்லிணக்கத்தின் காரணமாக சேதுபதி சீமையில் கும்பெனியாருக்கு எதிரான, நாட்டுப்பற்றைச் சுட்டும் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்பட்டன. ஒரு பெரும் சாதனையாக இன்னுமொரு நிகழ்ச்சி, சேதுபதி மன்னர் இல்லாத குறையைத் தற்காலிகமாக நிறைவு செய்யும் வகையில், தற்காலிக மன்னரை நியமித்துத் தற்காலிக அரசு ஒன்றையும் அமைத்தது ஆகும். எவ்வளவுதான் சித்திரங்குடி சேர்வைக்காரர் சிறையில் உள்ள சேதுபதி மன்னரை விடுதலை செய்யும் நோக்கில் தனது சொந்தத் திறமையினாலும், செல்வாக்கினாலும், மக்களைத் திரட்டினாலும், அது முழுமையான முறையான செயலாக அமையாது என்பதை மனதில்கொண்ட மருது சேர்வைக்காரர்களும், சித்திரங்குடி சேர்வைக்காரரும் சேதுபதி பீடத்தில் ஒருவரைத் தேர்வு செய்து மன்னரை நியமனம் செய்தனர் தற்காலிகமாக.

முதுகளத்தூர் வட்டத்தில் கடலாடிக்கு தென்கிழக்கே அமைந்து இருப்பது மீனங்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பத் தேவர், கனகசபாபதித்