பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன் - 79.

வேளையில்தான் ஒருவன்மட்டும் நரகம் செல்வதில் மகிழ்ச்சிதான் என்று பதிலளித்த அந்த மகானுபாவரை போன்ற மனத்திண்மை படைத்தவர் ஜகந்நாத ஐயர்.

குமாரத்தேவனும், திருக்கண்ணத்தேவனும் இளம் விவசாயிகள். தலைமுறை, தலைமுறையாகத் தங்களது குடும்பமும், உறவினரும் வேளாண்மை செய்வதற்கு கண்மாய் அமைத்து கரை வகுத்து கால்கள் வெட்டிக்கொடுத்து கவலையில்லாமல் வாழ்வதற்கு உதவிவந்த சேதுமன்னர் திலகம் சிறையில் படும் வேதனைகண்டு விம்மி அழுததுடன் மட்டுமல்லாமல், அதற்குக் காரணமான வெள்ளைப் பரங்கிகளை அழித்துப் புனித சேதுபதி சீமை மண்ணை மீட்போம் என வீரசபதம் மேற்கொண்ட வரிப்புலிகள் அவர்கள். கும்பெனியார் வரித்தீர்வை என மக்களிடம் கொள்ளை அடித்துக் கோட்டைகளாய்க் கட்டியிருந்து சேகரம் பட்டறை நெல்லைக் கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் கொள்ளையடித்து பாண்டு குடியில் அமைந்துள்ள புதிய சேது ஆதினக் கருவூலத்திற்கு அனுப்பி வைப்பதில் தீரர்கள். மற்றும் கிராமங்களில் நிர்வாக அலுவலராக வருகின்ற கும்பெனி அலுவலர்களது ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு அவர்கள் வந்த வழியிலேயே திரும்பி ஓடுமாறு விரட்டியடிக்கும் பிள்ளை விளையாட்டில் வல்லவர்கள் இவர்கள்.

இராமாதபுரம் சீமையில் இந்த மூவரின் பெயரை அறியாத குழந்தைகள்கூட அப்பொழுது இல்லை என்ற அளவிற்கு மக்களிடம் அறிமுகமானவர்கள். மக்களது மட்டற்ற மதிப்பிற்குரியவர்களாக இருந்தனர். நாட்டுப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி நாளெல்லாம் பாடுபட்ட நல்லவர்கள். சிந்தனையிலும், செயலிலும் வல்லவர்கள். இவர்களது கடுமையான முயற்சியினால், மீனங்குடி முத்துக்கருப்பத் தேவர், கோரிக்கையின்படி, இராஜசிங்கமங்கலம் அறுநூத்தி மங்கலம், அஞ்சுகோட்டை, ஓரூர், குத்தகை நாடு மக்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையில் இருந்து வாங்கப்பட்ட நூறு வண்டிகளிலும் கருமருந்து ஏற்றப்பட்டு, தென்மேற்குத் திக்கில்