பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*2 = - மறவர் சீமை

உள்ள பாஞ்சாலக்குறிச்சிக்கு அனுப்பப்பட்டன. அத்துடன், பாஞ்சைப் போரில் பங்கெடுத்துக் கொள்ள பதினைந்தாயிரம் மறவர்களும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கும்பெனித் தலைமையுடன் கண்ணோட்டமும், சிந்தனையும் செயல்முறைகளும் முதுகளத்துார் பகுதி மக்களது கிளர்ச்சியை அடக்கி ஒடுக்குவதில் மட்டும் முனைந்து இருந்ததால், இராஜசிங்கமங்கலம் பகுதியில் கிளர்ச்சிக்காரர்களது சித்து விளையாட்டுக்களைப் பெரிதுபடுத்திப் பார்க்கவில்லை. ஆதலால், மிகவும் தாமதமாகவே மறவர் சீமையின் தெற்கில் மட்டுமல்லாமல் வடக்கிலும் மக்கள் மதங்கொண்ட யானைகள் போல் அணி திரண்டனர் என்பதை அறிந்து பதை பதைத்தனர். கும்பெனியாரது கயத்தாறு ராணுவப் பாசறையில் பணிபுரிந்த கர்னல்-மில்லர் என்ற தளபதி இராமநாதபுரம் கலெக்டர் லூவிங்டனது உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இராமாநதபுரம் கோட்டையில், வடபகுதியில் அரண்மனைக்கு அருகில் இருந்த மாளிகையொன்றில்” தங்கியிருந்து இராஜசிங்கமங்கலப் பகுதி நிலைமையை நோட்டமிட்டு வந்தார் மில்லர்.

சித்திரங்குடி சேர்வைக்காரரது கிளர்ச்சிகளை அடக்க பாளையங்கோட்டையில் இருந்து தளபதி பானர்மேன், தளபதி : அக்னியூ ஆகியவர்கள் அடுத்துடுத்து முதுகளத்தூர் பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட பிறகு, தளபதி மில்லரது முழுப் பொறுப்பில் ராஜசிங்கமங்கலம் பகுதி ஒப்படைக்கப்பட்டது. அவ்வளவுதான் நரகாசுரத்தனம், பகுமாசுரைனைப் போல தொடங்கிவிட்டது. மக்களை மக்களாக நினைக்கவில்லை. மில்லர் ஆடு மாடுகளைப் போன்ற விலங்குகளை அடித்துத் துன்புறுத்துவது போல வன்முறையைப் பயன்படுத்தி மக்களை தனது வசப்படுத்த முயன்றார்.

கிழவன் சேதுபதி ஆட்சிக் காலத்தும் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் ஆட்சியின்போதும், சேதுபதி சீமையை

54. Tirunelveli District Records - vol. No. 3579/18.03.1801. p. p 69-72 55. Military Consultaties vol. No 288/20.10.1801 p.p. 420-430 இவனது மாளிகை புளு பாலஸ் என்ற பெயரில் இராமநாதபுர வட்டம் 4-ல் அமைந்து இருந்து சென்ற ஆண்டில் இடிக்கப்பட்டது. நகராட்சி ஆவணங்களில் இன்றும் மில்லர் பங்களா தெரு என வழங்கப்படுகிறது.