பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B1 மாவீரன் மயிலப்பன் - --

ஆக்கிரமிக்கப் படையெடுத்து வந்த, மதுரை நாயக்க, தஞ்சை மராத்திய மன்னர்களது பெரும்படைகளை அடுத்து "படைவெட்டி" என்ற விருதுகள் பெற்ற வீர மறத்தலைவர் பலரின் வழியினர்தான் அப்பொழுது அங்கு இருந்தவர்கள். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுவதில்லை அல்லவா? அவர்கள் தொடர்ந்து கும்பெனி நிர்வாகத்திற்கு விலாப்புறத்தின் இரு பக்கங்களிலும் இணைந்த கருவை முட்கள்போல நடத்திய சாதனைகளில் சிறப்பானது சிவகெங்கையில் இருந்துவந்த அணியினருடன் இணைந்து குத்தகை நாட்டைக் கொள்யிைட்டது ஆகும். கமுதிப் பேட்டை கொள்ளையில் கைப்பற்றிய தானியத்துடன் பெருத்த அளவு கும்பெனிப் படையார்களிடமிருந்து வெடி மருந்துப் பொருள்களும் வெற்றிப் பொருளாகக் கிடைத்தன. அவை தொண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்ற செய்தி. இராமநாதபுரம் அமில்தார் அறிக்கையில் காணப்படுகிறது.

அறுவடை காலத்தில், வேளாண்மைக்கு ஏற்பட்ட ஏரிடுதல், உரம்தட்டல், விதைத்தல், களை பறிப்பு, கங்காணம் போன்ற செலவுகள் கணக்கிடப்பட்டு அவைகளுக்காக மதிப்பிடப்பட்ட நெல்லை ஒதுக்கி முதலில் விவசாயிக்கு கொடுத்து விடுவது உண்டு. இதற்கு பொதுச் செலவுகள் என்று குறிக்கப்பெறும். மேலும் கதிர் அறுப்பு, கதிர் அடித்தல், பிணைமாட்டுச் செலவு, களத்துப்பிச்சை போன்றவைகளுக்கு நெல்லை அளந்து கொடுத்துவிட்டு மீதமுள்ள நெல்லை சமபங்காகப் பிரித்து வேளாண்மை செய்த விவசாயியும் சேது சமஸ்தான அலுவலர்களும் எடுத்துக்கொள்வது சேது நாட்டின் அப்பொழுது இருந்த நடைமுறை." ஆனால், சேதுபதி மன்னர் சிறையிலடைக்கப்பட்டு, சேதுபதி மன்னர் நிலையில்கும்பெனி நிர்வாகம் இருந்து வந்ததால், கிளர்ச்சிக்காரர்கள் சேதுபதி மன்னருக்கான அறுவடை நெல்லை கும்பெனியாருக்கு கொடுக்க மறுத்தனர். கொடுக்க வேண்டாம் என மற்றவர்களிடமும் பிரச்சாரம் செய்தனர்.

56. RajaRam Rao. T - Manual of Ramad Samasthanam 1895