பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_B3

மாவீரன் மயிலப்பன் - -

ஆயிரம் கசையடி பெற்று, இரும்புச் சங்கிலியில் கட்டுண்டு கிடந்த இரும்பு மனம் படைத்த அந்த வீர இளைஞன் குமாரத்தேவன் எப்படி, எங்கே, எப்பொழுது புகழுடம்பு பெற்று தியாகியானான் என்ற செய்தி அரசு ஆவணங்களில் காணப்படவில்லை. அதேபோல மாவீரர் திருக்கண்ணத் தேவனை கொலைகாரன் மில்லர் எத்தகைய கொடும் துன்பத்திற்கு ஆளாக்கினான் என்ற விவரங்களையும் அறிந்து கொள்வதற்கில்லை? ஏன்? இன்னும் நாட்டு விடுதலைக்காக, அந்நிய ஏகாதிபத்திய வெறியர்களை எதிர்த்த இளவல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது வழியில், காட்டையும், வீட்டையும் பிறந்த மண்ணின் மீது கொண்ட பற்றினால், பாசத்தினால், சொல்லில் அடங்காத துயரத்தையும், துன்பத்தையும் தாங்கியவாறு மெளனமாக தியாகிகளான வீரமறவர்களை வரகுண வளநாடு என்று வழங்கப்பட்ட இராஜசிங்கமங்கலம் வரலாறு, கண்களில் மட்டுமல்ல இதயத்திலும் இரத்தக்கண்ணிரை நிறைத்து காலமெல்லாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளது.

துன்பமும், துயரமும் சூழ்ந்த அந்தப்பகுதி மக்களது தியாச வரலாறு தொடர்ந்தது. இராமநாதபுரம் சீமை கலெக்டர் திரட்டிய பதினாராயிரம் கூலிக்காரர்கள் கொண்ட அணிகள் இராமநாதபுரத்திற்கு வடக்கேயுள்ள நாடுகளில் புகுந்து கிளர்ச்சிக்காரர்களை அடக்கி ஒடுக்குவதில் ஈடுபடுத்தப்பட்டன." அவர்களது திட்டப்படி அந்த பகுதியில் இருந்த இரண்டாயிரத்திற்கும் மிகுதியான கிளர்ச்சிக்காரர்களது குடும்பத்தினரை பலவகைகளிலும் துன்புறுத்தினர். ராஜசிங்கமங்கலம், அறுநூத்தி மங்கலம், திருவாடனை, ஒளியூர் ஆகிய ஊர்களில் சிலநூறு கிளர்ச்சியாளர்களை வேட்டையாடிப் பிடித்தனர்." அந்தப் பகுதி முதியவர்களது நினைவிற்கு எட்டாத வகையில் இராமநாதபுரத்திற்கும், தொண்டிக்கும் இடைப்பட்ட நாடுகளில் கும்பெனியாரது வன்முறை தலைவிரித்தாடியது.

நெஞ்சுரத்துடனும் நேர்மைத் திறனுடனும் கும்பெனியாரது

61. Military Consultation vol - 288(A) 15.09.1801, 62. Military Consultation vol - 28.6844-45 6967.