பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பள்= == -

13. மயிலப்பன் வாக்குறுதி

இளவேனில் காலத்தை நினைவூட்டும் இளம் வெய்யில் காய்ந்து கொண்டு இருந்தது. சிக்கல் சத்திரத்தில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் கன்னியாகுமரி சேது மார்க்கத்தில் புழுதியைக் கிளப்பிவிட்டு ஓடி வந்த ஐந்தாறு குதிரைகளும் வீரர்களும் கடுகுசந்தைச் சத்திரத்தில் அருகில் நின்றனர்.

சேணத்தை விட்டு இறங்கிய வீரர்கள் அவர்களது தலைவர் கூறிய உத்தரவை ஏற்று இரு வீரர்கள் சத்திரத்திற்குள் நுழைந்தனர்.

மற்றவர்கள், சத்திரத்தின் அருகில் நின்ற (IIIT ETLT) (E}} LDIT நிழலில் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்தனர்.

சத்திரத்தின் பணியாள் ஒருவர் செம்பில் மோர் கொண்டு வந்து அந்தக் குழுத் தலைவரிடம் மிகவும் பணிந்து மரியாதையுடன் கொடுத்தார்.

மோரைக் குடித்துவிட்டு செம்பை அந்தப் பணியாளிடம் திருப்பிக் கொடுத்த பொழுது, சத்திரத்தின் எதிரே உள்ள குடியிருப்பில் இருந்து ஐந்தாறு பேர்களும் இளம் பெண்களும், சிறுவர்களும் - அவரை நோக்கி வருவதைக் கவனித்தார்.