பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=மறவர் சீமை

வந்தவர்ளில் வயது குறைவான இளம்பெண் ஒருவர் அவர்முன் வந்து நாணத்துடன் "ஐயா! கும்பிடுகிறேன்" என்று ஒருவகையாகத் துணிவுடன் சொல்லிவிட்டு, வெட்கம் மேலிட மேலும் எதுவும் சொல்லாமல் நிலத்தை நோக்கி நின்றாள்.

"நன்றாக இரு அம்மா. என்னிடம் எதுவும் சொல்ல வேண்டுமா?" அவர் கேட்டார்.

வெட்கத்தினின்றும் விடுபடாத அந்த இளம் நங்கை மெளனம் அவருக்கும் புதிராக இருந்தது. தன்னை ஒரு வேளை வேறு ஒருவருக்குப் பதிலாக, தவறாக நினைத்துவிட்டதால், சொல்ல வந்த செய்தியைச் சொல்லாமல் இருக்கிறாளோ என்று நினைத்தவராக

"அம்மா! முதலில் நீ சொல்லவந்த செய்தி எனக்குத்தானா?... என்னை, யார் என்று அடையாளம் கண்டு கொண்டாயா?" என்று அந்தப் பெண்ணை அவர் வினவினார். இப்பொழுது அந்தப் பெண்ணிற்கு தைரியம் வந்துவிட்டது.

"ஐயா! தாங்கள் சித்திரங்குடி ஐயா தானே! தாங்கள் இந்த சாலையில் பல தடவை சென்று இருப்பதை பார்த்து இருக்கிறேன். அப்பொழுது எல்லாம் எங்கள் ஊர்ப்பெரியவர்கள், தங்களை மகாபாரதத்தில் வருகின்ற, வீர அபிமன்யுவிற்கு நிகராக, தங்கள் வீர சாகசங்களைப் புகழ்ந்து சொல்லி இருக்கிறார்கள். எங்கள் ஊரைச் சேர்ந்த வாலிப மட்டங்கள், எட்டுப்பேர் தங்களது கூட்டத்தில்தான் இருந்து வருகின்றனர்” அந்தப் பெண் சொன்னாள்.

"மிகுந்த மகிழ்ச்சி. பிறகு என்ன தயக்கம் விஷயத்தை தாராளமாக என்னிடம் தெரிவிக்கலாமே!” “ தங்கள் கூட்டத்தில் எட்டுப்பேர் இருக்கிறார்கள் அல்லவா! அவர்களில் எனது மாமனும் ஒருவன்" என்று சொல்லும்பொழுது நாணத்தினால் அவளது முகம்