பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



1. நீங்கள் பயிற்சியாளராக விரும்புகிற ஒர் ஆட்டத்தில் அதிக ஈடுபாடும், புறம் போகாத பற்றும் கொண்டவராக முதலில் இருக்க வேண்டும். அந்த விளையாட்டை நேசிக்கிற வராக, நினைவிலும் கனவிலும் யோசிக்கிறவராகவும் இருத்தல் வேண்டும்.


2. விளையாட்டைப் பற்றிய விதி முறைகளை நன்கு ஐயம் தீரக் கற்றுக் கொள்ள வேண்டும். அடிப்படை விதிகளில் குழப்பம் ஏற்பட்டால், அனைத்துச் செயல்களுமே அனர்த்தங்களாகிவிடுமல்லவா.


தெளிந்த விதிமுறைகள் தாம் தீர்க்கமான திட்டவட்ட மான பாதையை செப்பனிட்டுத் தருகின்றன என்பதை மறந்து விடக் கூடாது.


3. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று படிப்பது வேறு. பிறருக்குக் கற்றுத்தர வேண்டும் என்பது வேறு நீங்கள் கற்றுத்தரும் நிலைக்கு உயர்த்திக் கொள்ளும் பொழுது, நிச்சயமாக, அந்த விளையாட்டு பற்றி நன்கு தெரிந்து கொண்டவராகவே இருக்க வேண்டும்.


4. நீங்கள் நன்கு உழைக்கக் கூடியவராக, உழைப்பதில் ஆர்வம் உள்ளவராக, இன்பம் காண்பவராக இருந்தால் தான் பயிற்சியாளராகப் பரிமளிக்க முடியும்.


ஏதாவது சொல்லி விட்டு நேரத்தை போக்கலாம். பிறரை ஒடச் சொல்லி, ஆடச் சொல்லி நாளைக் கழிக்கலாம் என்ற எத்து வேலையும் சித்து வேலையும் இங்கு எடுபடாது.


உண்மையாக ஆடி, உழைக்க விரும்புகிறவர் மட்டுமே பிறரிடம் பெருமை தேடிக் கொள்ள முடியும். கடினமான