பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 103


போலவே நீங்களும் நடந்து கொள்ள வேண்டும். உங்களை முழுதுமாக பின்பற்றுகிறவர்களாகத் தான் பயிற்சி பெறுபவர்கள் இருக்கிறீர்கள்.


உதாரணத்திற்கு சில. நீங்கள் நேரத்திற்கு வரவேண்டு மென்று மற்றவர்களை எதிர்பார்க்கிறீர்கள். வற்புறுத்துகின் நீர்கள், அது போலவே, நீங்களும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே வரவேண்டும். தாமதமாக நீங்கள் வந்து, மற்றவர்களை வற்புறுத்துவது கேலிக்குரிய செயலாகி விடும்.


நீங்கள் புகை பிடித்துக் கொண்டு, மற்றவர்களைப் பார்த்து புகைப்பது உடலுக்குக் கேடு என்று புத்திமதி கூறினால், அது உங்கள் பேச்சுக்கே மதிப்பளிப்பதாக இருக்காது.


ஆகவே, நீங்கள் எதிர்பார்க்கின்ற நன்னடத்தை , கண்ணியம், கடமை உணர்வு அனைத்தையும் நீங்களே முதலில் செய்து, வழிகாட்டுகின்ற வல்லமை படைத்தவராக விளங்க வேண்டும்.


10. எந்த செயலையும் கற்றுத் தரும் பொழுது, சிறு சிறு செயலானாலும், நீங்கள் எச்சரிக்கையுடனும் கவனத் துடனும் இருக்க வேண்டும். படகில் ஏற்படுகின்ற சிறு ஒட்டை, படகையே நீருக்குள் அமிழ்ந்து விடச்செய்யும்.


பயிற்சி பெறுபவர்கள் இழைக்கின்ற சிறுசிறு தவறுகள், அவர்களை வளர்ச்சியடைய முடியாமல் செய்து விடும்.


எனவே, சிறு தவறானாலும், அதை நீங்கள் முளையி லேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். முள் செடியை முளையில் கிள்ளி எறியத் தவறி விட்டோமானால், பிறகு அதை கோடரிக் கொண்டு தான் வெட்டி வீழ்த்த வேண்டும். அகிம்கு எத்தனை முயற்சி. கடுமையான உழைப்பு!