பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அது போலவே, சிறு தவறுகளில், கவனம் செலுத்தி நீங்கள் சிறப்பான பணியாற்ற வேண்டும்.


11. நீங்கள் எல்லோரையும் சமமாகக் கருதலாம். ஆனால், பாராட்டுவதில் சமமாக இருக்கக் கூடாது. நன்கு செய்பவரை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அதற் காக ஒன்றும் செய்யத் தெரியாதவரையும் பாராட்டினால் நிலைமை என்ன ஆகும்?


நல்ல திறமையுள்ளவர்க்கு நாவாரப் பாராட்டு. உடனே செய்ய இயலாதவர்க்கு உற்சாகம் தரும் அறிவுரை.


இப்படிப் பாகுபடுத்திக் கொண்டு, எச்சரிக்கையுடன் பழகவேண்டும். பாராட்ட வேண்டும்.


12. எதையும் நேர்வழியில் நடத்திச் செல்ல வேண்டும். திசைமாறான வழிமுறைகளைக் கற்றுத் தரவே கூடாது. நிதர்சனமாக இருக்கும் நடை முறைகளையே கற்பிக்க வேண்டும். கற்பனைத் தனமான வெறுங்காட்சி களை நினைவு படுத்தி, பயில்பவர்களைக் குழப்பி, பலவீனப் படுத்தி விடக் கூடாது.


13. நீங்கள் பயிற்சியாளர் என்றாலும், ஒர் ஆசிரியர் தான் என்பதை என்றும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.


நீங்கள் கற்றுத்தரும் விளையாட்டு பற்றிய பெருமை களை, திறமைகளை நேரடியாக, தெளிவாகச் சொல்லித் தந்துவிட்டால், நீங்கள் எதிர்பார்க்கிற பாதி வெற்றியை உடனே பெற்றுக் கொள்கிறீர்கள்.


14. ஆகவே, பயிற்சியளிக்கும் பொழுது நீங்கள் எந்த விஷயத்திலும் உறுதியாக இருக்க வேண்டும். எதைக் குறிப்