பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


பயிற்சி தரும் கலையானது, பாடம் கற்றுத் தரும் முறைகளிலே மிகவும் முக்கியமான இடத்தினைப் பெற்றிருக்


கிறது.


திட்டவட்டமான இலட்சியத்துடன், தமது மாணவர் களுக்கு அதாவது விளையாட்டாளர்களுக்கு உதவுகின்ற பண்பிலே பயிற்சியாளர்கள், பெரியதொரு பங்கினை வகிக்


இன் றார்கள் t


அவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றதொரு வாய்ப்பான வழியினைக் காட்டுவதுடன் நின்றுவிடாமல், புதிய பலம் படைத்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்கி, பிறந்த தேசத்தின் புகழையும் பெருமையையும் பாரெங்கும் பரப்பிவிடும், பண்பார்ந்த செயல்களிலும் ஈடுபட்டிருக் கின்றார்கள்.


அவர்களுக்குத் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தாலும், இன்னின்ன பழக்க வழக்கங்கள், பண் பாட்டுச் செயல்கள் இருக்கின்றன என்பதை நினைவு கூரும் வண்ணம், கீழே காணும் குறிப்புக்களை விளக்கியிருக் கிறோம்.


1 H நம்பிக்கை


பயிற்சியாளர் ஒருவர், தான் செய்கின்ற தொழிலில் முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதாவது, தான் செய்கின்ற தொழிலான பயிற்சித் தொழிலும் ஒரு கல்வி யைப் போன்றதே. கல்வி கற்பாருக்கு உதவுகின்றது போலவே, தான் மேற்கொள்ளும் விளையாட் டுக்கல்வி முயற்சியும் தம்மை நம்பி வருபவர்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும் என்ற முறையில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். -