பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


2. பயிற்சிகளும் பள்ளிகளும் பயிற்சி பெற வருகின்றவர்கள் ஏறக் குறைய எல்லோருமே பள்ளி மாணவ மாணவிகளாகத் தான் இருக் கின்றார்கள். வெளிப்புறத்திலிருந்து வருகிற இளைய சமு தாயத்தினர் மிக மிகக் குறைவு.

ஆகவே, பள்ளியிலிருந்து வருகின்ற மாணவ ஆட்டக் காரர்களை, அவர்கள் படிக்கும் படிப்பு பாதிக்காத வண்ணம் இருப்பது போல, பயிற்சித் திட்டங்களைப் பெரும் பொறுப்புடன் வகுத்திட வேண்டும்.

விளையாட்டுப் பயிற்சியும் பள்ளியுடன் இணைந்த பாடத் திட்டங்களின் ஒரு பகுதி தான் என்பதை. பயிற்சி யாளர்கள் உணர்ந்திட வேண்டும். உணர்ந்தாகவும் வேண்டும்.

அவர்கள் தங்கள் பள்ளிப் பாடங்களை இழந்து போகா மல் இருப்பது போல் பார்த்துக் கொண்டால் தான், அவர் களும் தாங்களாகவே ஆர்வமுடன் முன்வந்து கற்றுக் கொள்வார்கள்.

அதுபோலவே, படிப்பிக்கும் பிறத்துறை ஆசிரியர்களும் முனு முனுக்காமல் அனுமதி வழங்கி அனுப்பி வைப்பார்கள்.

பாடம் படிப்பதே பெரிதென்று போதித்து, பள்ளிக்கு அனுப்புகின்ற பெற்றோர்கள் அனைவரும், விளையாட்டுப் பற்றிய கருத்துக்களில், பத்தாம் பசலிகளாகத் தான் இருக் கின்றார்கள்.

விளையாட்டினால், படிப்பு மட்டுமல்ல, வாழ்க்கையே பாழாகிப் போய்விடும் என்று ஒரு வித்தியாசமான மனோ பாவத்தில் திளைத்திருக்கின்றார்கள். படிப்பைப் பாதிக் காது என்று பெற்றோர்களுக்குப் புரிய வைத்து விட்டால்,