பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆகவே, ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கவும், பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கவும் என்ற பாங்


லே பயிற்சி முறைகளைப் பிரயோகிக்க வேண்டும்.


எல்லோருக்கும் ஒரே மரதிரி விதிமுறை என்றால், அதில் எள்ளளவும் கூட பின்வாங்காமல், விதிகளைப் பின்பற்ற வேண்டும்.


அத்துடன், பயிற்சி பெறுபவர்களிடமிருந்து ஏதாவது பெற வேண்டும் என்ற எந்தவிதமான எதிர்பார்ப்பினையும் வைத்துக் கொள்வது தவறான வழிமுறையாகும். பயிற்சி யாளர் தர அவர்கள் பெற, என்கிற பாங்குதான் எல்லா விஷயத்திலும் இருக்க வேண்டும் என்ற பண்பிலிருந்து அவர் பிறழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


4. தருணத்தில் உற்சாகம்


பயிற்றுவிக்கும் பொழுது, மாணவர்களின் உடல் நிலையைப் பக்குவப்படுத்துவது போலவே, மனோநிலையி லும் பண்பாட்டுப் பக்குவத்தை ஊட்டி விட வேண்டும்.


ஒவ்வொரு ஆட்டக்காரரும் எப்படிப் பட்டவர், எத்த கைய குணாதிசயமுள்ளவர், எப்பேர்பட்ட கருத்துக்கள் உள்ளவர் என்பதைக் கூர்ந்து கவனித்து, அவரவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருப்பது அவசிய மாகும.


என்ன சொன்னால் அவர்களுக்குப் புரிய வைக்க முடி யும், எப்படிக் சொன்னால் அவர்களை உற்சாகப்படுத்த முடியும்; என்கிற அறிவார்ந்த வழிகளிலும் பயிற்சியாளர் கள் தங்கள் ஆட்டக்காரர்களை அணுகித் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.