பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி I I 3


மற்றவர்கள் திறமையை மதிப்பதும், புகழ்வதும். விளையாட்டுத் திறன்களை அறிந்து பாராட்டுவதும் தான் விளையாட்டுப் பண்பாகும்.


ஆதை விட்டு விட்டு, எதிராளிகளை உண்மையான பகைவர்களாகப் பாவிப்பதும், பகையுணர்வு கொண்டு ஏசுவதும், அவர்கள் மேல் இல்லாததும் பொல்லாததுமான வதந்திகளைப் பரப்புவதும் மன்னிக்கமுடியாத குற்றமாகும்.


இப்படிப் பட்ட குணாதிசயங்கள், ஆட்டக்காரர்கள் மத்தியில் ஏற். டாமல் தடுத்து விட வேண்டும். மாறாக, வளர்த்துவிடும் சில பயிற்சியாளர்களும் இருக்கின்றார்கள்.


கனவில் கூட இத்தகைய கீழான செயல்களைச் செய்ய இடந்தர விடாமல் பயிற்சியாளர்கள் பார்த்துக் கொண்டால், எதிர்கால இளைய தலைமுறை இன்னும் சீரிய பண்புகளில் செழித்தோங்கி வளரும் என்பதில் சிறி தளவும் ஐயப்பாடே இல்லை.


7. மொழிகளில் பண்பாடு


பயிற்சியாளர்கள் கற்றுத் தரும் நேரத்தில், உடனே கற்றுக் கொள்கிற ஆட்டக்காரர்கள் உண்டு. இரண்டு மூன்று முறை சொல்லித் தந்த பிறகு பிடித்துக் கொள்கிற மந்தமானவர்களும் உண்டு.


பல முறை பயிற்சி தந்தாலும், பிடிபடாமல், செய்யும் தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்கிற திறமைய ற் வர்கள் கூட உண்டு.


அப்பொழுது, பயிற்சியாளர் கோபப்பட ஏதுவான சூழ்நிலை அமைவதுண்டு. அதற்காக ஆத்திரப்படுவதும். உணர்ச்சி வசப் படுவதும், கீழான மொழிகளில் திட்டுவதும்