பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தரக்குறைவான வார்த்தைகளைப் பயன் படுத்துவதும் மிக மிகத் தவறாகும்.


எந்தக் காரணத்தை முன்னிட்டும், பயிற்சியின் போது, பதட்டப்படாத மனோ பக்குவத்தை வளர்க்கத் தான் முயல வேண்டுமே தவிர, மட்டரகமான மொழிகளைப் பயன் படுத்தும் கடை மனிதராகப் பயிற்சியாளர் மாறிவிடக்


கூடாது.


அது கொடுரமாள மனப்பாங்கை வளர்ப்பதுடன், எதிரி களுடன் விலங்குகள் மோதும் போராட்டமாக உண்டாக்கி விடும் என்பதால், மொழிகளில் பண்பாட்டினை வளர்த் திடும் பயிற்சிகளையும் கொடுக்க வேண்டும்.


இனிய வார்த்தைகளைப் பேசும் பொழுது தாக்குக்குக் காயம் ஏற்பட்டு விடுகிறதா என்ன ? கெட்ட வார்த்தை களைக் கொட்டித் திட்டிப் பேசும்போது என்ன இனிமை பிறந்துவிடுகிறது?


இதனை எண்ணி, ஆட்டக்காரர்களைப் பண்பாடு மிகுந்தவர்களாக ஆக்குவது பயிற்சியாளரின் தலையாய பண்பாக அமைந்து விடுகிறது.


8. நல்ல வழிகாட்டி


பயிற்சியாளர்கள் தாங்கள் நடந்து கொள்ளும் முறை களைப் பொறுத்தே, அவர்களது இலட்சியம் வெற்றி பெறுகிறது.


ஆட்டங்களில் திறன் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் பொழுதே, கொண்டிருக்கும் பண்பாடுகளின் வெளிப் பாட்டினால் மாணவர்கள் அவர்களைப் பின்பற்றப் பெரிதும் விருப்பமும் வேட்கையும் கொள்கின்றார்கள்.