பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 1 I 9 •


ஆசனம் ஒரு அறிவியல் முறை


விஞ்ஞான பூர்வமான, வாழ்க்கைக்கு ஏற்ற ஒரு பயிற்சி


தான் ஆசனம் என்றால், கேட்பவர்களுக்கு ஆச்சரியமாகவே


இருக்கும் என்றாலும், இதுதான் உண்மை.


ஆசனங்களை 2 வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.


1. தியானத்திற்குரிய ஆசனங்கள்.


2. வலிமைக்கும் வனப்புக்குமுரிய ஆசனங்கள்.


1. தியானத்திற்குரிய ஆசனங்கள் என்பது, ஒரு ஆசனத்தின் முற்றிய, முதிர்ந்த முடிவு நிலை இருக்கை யாகும். அதாவது பத்மாசனம், சுகாசனம், ஸ்வஸ்திகாசனம் போன்ற ஆசனங்களில் ஏதாவது ஒன்றில் அமர்ந்துகொண்டு, மணிக்க ைக்காக அசையாமல் இருந்து தியானத்தில் ஈடுபடுவது.


இதற்காக தனியான திறன் நுணுக்கமோ செயல் புதுமைகளோ, எதுவுமே கிடையாது. உட்காரும் பொழுது


திரடல் அல்லது உறுத்தல் இல்லாத ஓர் இருப்பு என்பது தான் அவசியம்.


2. ஆனால் வலிமை தரும் ஆசனங்கள் எல்லாம்


அமைப்பில் இருக்கையில் ஒன்றுக் கொன்று வேறுபாடு உள்ளவையாகும். அதாவது, உடல் அமைப்புகளில் எல் லாம் ஒர் ஒற்றுமையை உண்டாக்கி, செயலில் வலிமையை ஊட்டி, நடை முறையில் சம நிலையை ஏற்படுத்த முயற் சிப்பதே இவற்றின் லட்சியமாகும்.


இவ்வாறு இலட்சிய நோக்குள்ள வலிமை தரும் *"ங்கள் வழங்குகின்ற பயன்களை, நாம் இரண்டு வகை ‘ப் பிரித்துக் காட்டலாம். -