பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


1. உடலுக்கு நல்ல சக்தியை சேகரித்துத் தருவது.


2. மூளை, முதுகுத்தண்டு இவற்றின் மூலம் மேம்பட்ட நிலையைப் பெறுவது.


ஆசனங்கள் எல்லாம் நல்ல சக்தியை நாளெல்லாம் எவ் வாறு நல்குகின்றன என்பதை, நாம் இனி விளக்கமாக அறிந்து கொள்வோம்.


1. உடல் செல்களுக்கும் உறுப்புக்களுக்கும் சிறந்த போஷாக்கினை ஆசனங்கள் அளிப்பதுடன், உடலுக்குள்ளே சுரக்கும் நாளமில்லா சுரப்பிகளின் சுரக்கும் ஆற்றலை அதிகப்படுத்தி, உடலுக்கு உன்னத ஆற்றலை வளர்த்து விடுகின்றன.


1. ஆசனம் செய்யும் பொழுது, வயிற்றைச் சுற்றியே முன்வளைவும், பின்வளைவும் பக்கவாட்டில் முறுக்குதலும் போன்ற செயல்கள் இருப்பதால், வயிற்றுக்கு ஒரு சிறந்த * மசாஜ் செய்வது போல் அமைந்துவிடுகிறது. அதன் காரண மாக வயிறும், பெருங்குடலும், சிறுகுடலும், ஈரல், கணையம் போன்ற உறுப்புக்களும் நாள் முழுதும் களைத்துப் போகாமல் புத்துணர்ச்சியுடன் பணியாற்றத் துரண்டு கின்றன.


2. தசைகள் எல்லாம் நீளுந்தன்மை பெறுவதால், நல்ல சக்தியையும் வலிமையையும் பெறுகின்றன. அதாவது தசைகள் எல்லாம் ஆசனங்கள் மூலம் நீட்டல், மடித்தல், சுருங்கல், விரிதல் போன்ற இயக்கங்களில் ஈடுபடுவதால் இந்த ஏற்றமிகு விளைவுகள் நிகழ்கின்றன.


3. உடலுக்கு உற்சாகமாக இரத்தத்தை இறைத்து வழங்குகிற இதயத்திற்கோ, ஆசனங்களினால் அற்புதமான ஆற்றல் கிடைக்கிறது. அதற்கு சுகமானவிடுப்பு(Relaxation) கிடைக்கிறது. உழைப்புச் சுமையும் குறைகிறது.