பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி I 23


9. எல்லா உறுப்புக்களுக்கும் தொடர்ந்து ஜீரணமான உணவுப் பகுதியினை பெறுமாறு வழங்குகிறது இரத்த ஒட்டம். அத்துடன் நில்லாது. உடலில் உற்பத்தியாகின்ற வேண்டாத கழிவுப் பொருட்களையெல்லாம் அதாவது கரியமிலவாயு, யூரிக்அமிலம், யூரியா, வியர்வை, சிறு நீர், மலம் போன்றவற்றை விரைவில் வெளியேற்றிடவும் செய் கின்றன.


10. ஒவ்வொரு திசுவும், ஒவ்வொரு நரம்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது. நரம்புகள் திறமாக, வலிமை யுடன் இருந்தால்தான், திசுக்களும் திறமையாக செயல் பட முடியும். அப்படிப்பட்ட வேலையை ஆசனங்கள் செய்கின்றன. நரம்புகளை இரும்பென ஆக்கும் ஆசனங் களால், திசுக்கள் பெறும் வல்லமை தான் என்னே?


யோகாசனங்கள் எல்லாம் தசைகளுக்கு வலிமையையே அளிக்கின்றன. முதுகுத் தண்டினை இயல்பாக நெகிழும் வண்ணம் வளையவும் நிமிரவும் செய்து, இளமை உணர்வைத் துரண்டுகின்றன.


இப்படிப்பட்ட பெரும் பணியை ஆற்றும் ஆசனங் களைப் புரிந்து கொள்ளாமல், பொல்லாங்கு பேசுபவர் களைப் பற்றி நாம் மறந்து விடுவோம்.


ஆசனங்கள் செய்வோம். ஆற்றலையும் அருமையான *த்தையும் பெறுவோம். அபாயமற்ற வாழ்வு வாழ்வோம்.


கம்பிக்கையுடன் ஆசனங்கள் செய்து, நாளெல்லாம்