பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 28 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


காலை மார்புக்கு வருவதுபோல மடித்து வைத்து, மற்றொரு காலினை ஊன்றி, விறைப்பாக சமநிலை கிடைப்பது. போல நின்று கொள்ள, பயிற்சி முறை தொடங்குகிறது.


மடித்து மேலே மார்புக்கு முன்புறமாக உயர்த்தியுள்ள காலை, இரண்டு கைகளாலும் நன்றாகப் பிடித்துக் கொண்டு, (மடித்த காலுடன்) மேலே கொண்டுவர முயல வேண்டும். இவ்வாறு மேலே கொண்டு வரும் போது, இடுப்பு, தொடை மற்றும் முதுகுப் புறத் தசைகள் எல்லாம் நன்கு இயங்கும், அதிகமா வலியோ அல்லது பிடிப்போ (Pull) ஏற்படாதவாறு, மேற்புறமாக காலை இழுத்திட


வேண்டும்.


ஒரு காலை மடித்து மேலே மேலே கொண்டு வந்தது. போல மறுகாலை மடித்து, மற்றொரு காலில் நின்று இப் பயிற்சியைத் தொடர வேண்டும். கால் எளிதாக மேலே வருவது போன்ற நிலைமை ஏற்படுகிற வரை, இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்திட வேண்டும்.


விருப்பத்துடன் பயிற்சிகளைச் செய்யவும்.


3. இடுப்பு, கால் தசைகளுக்கு வலிமை தரும் பயிற்சிகள்.


நீச்சல் குளத்தின் கரைப் பகுதியை (Edge) இரண்டு கைகளாலும் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு, இரண்டு கால்களையும் பின்புறமாக நீட்டிக் குப்புறப்படுத்து, தண்ணிரில் மிதந்து கொள்வது போல மிதந்து கொள்ள (Float) Gau G#I (Lh.


பிறகு, விறைப்பாக நீட்டியுள்ள இரண்டு கால்களையும் தூக்கி மேலும் கீழுமாக மாறி மாறி (Alternately)