பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. வெளிநாட்டுப் போட்டிகளில்


இந்தியா ஏன் தோற்கிறது ?


நமது வீரர்கள், வீராங்கனைகளின் விளையாட்டுத் தரம், போட்டியிடும் திறம் போதுமான அளவில் உயர வில்லை. அதனால் தான், அவமானப்படும் அளவிற்குத் தோற்றுப் போகிறோம் என்பதாக பலர் சாடுவார்கள்.


நமது வீரர்கள் தொடர்ந்து பயிற்சி செய்வதில்லை ஏதோ “பஞ்சத்திற்கு ஆண்டிகள் போல, போட்டிகள் நடை பெறும் நேரத்தில், வந்து கலந்து கொள்வதற்காக சிறிது நாட்கள் பயிற்சி செய்வதால் தான் திறமைகள் வளர்வ தில்லை என்று கொஞ்சம் கோபப்படுபவர்களும் உண்டு.


இந்தியா வறுமை நாடு. இந்திய வீரர்களுக்குப் போதிய சத்துள்ள உணவு கிடைப்பதில்லை. அரசாங்கமோ அல்லது உரிய தலைமைக் கழகங்களோ சரியான நடவடிக்கை எடுப்பு