பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


ஆடாமல் தோற்றும், பிற்பகுதியில் சிறப்பாக ஆடுவதையும் அறிவோம். அதற்குக் காரணம் பயணக் களைப்புதான். இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கே நித்திய கண்டம்” என்று தொடங்கி, புறப்பட அனுமதி கிடைத்து, கடைசி நேரத்தில் புறப்பட்டு, போட்டி தொடங்கும் முதல் நாளைக்கு முன்னால் போய் சேர்ந்தால், பயணத்தின் களைப்பு தானே முதலில் நிற்கும்! ஒய்வு வேண்டாமா?


6. அணியில் ஆடியவர்களே, எப்படியோ பல சாகசங், களில் தொடர்ந்து ஆடுகின்ற சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்கின்றார்கள். புதியவர்கள் நிறைய பங்கு பெற்றால் தான், இளையவர்கள் அதிகம் வாய்ப்பு பெற்றால்தான், அணியின் ஆடும் ஆற்றலும் அதிகமாகும். இந்த சூழ்நிலையை இந்திய விளையாட்டுக் கழகம் பொறுப் பேற்றுச் செய்ய வேண்டும்.


7. இந்திய அணியினருக்கு வெளிநாடுகளில் விளை யாடும் அனுபவங்களை அதிகமாக ஏற்படுத்தித் தர வேண்டும். அப்பொழுதுதான் அயல்நாட்டு சூழ்நிலை, தட்ப வெப்பநிலை, உணவு முறை, போட்டியிடும் அனுபவம் போன்றவற்றில் வீரர்களும் வீராங்கனைகளும் தெளிவு. பெற்றுக் கொள்ள முடியும்.


இப்படிப்பட்ட பாதிக்கும் சூழ்நிலைகள் இருக்கும்போது, வெளிநாடுகளில் இந்தியா எப்படி தோற்காமல் இருக்க முடியும்? ஜெயித்தால் அதுதான் அதிசயம்.


ஆசிரியர் குறிப்பு


ஆகவே, குறைகள் களையப்பட, உரியவர்கள் உரிய நேரத்தில் செயல்பட்டால், இந்தியா வெற்றி பெறுவது உறுதி, ஏனெனில், இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் எந்த நாட்டினர்க்கும் இளைத்தவர்கள் அல்லர் என்பது. பல நேரங்களில் பலமுறை வெளிபடுத்தப்பட்டிருக்கின்றன. நமக்கு வெல்லும் வாய்ப்பு நிறைய உண்டு என்று முயல்வோம். வெற்றி பெறுவோம்!