பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 38 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


விட்டு சிரிக்கின்ற வக்ரமக்காரர்களைப் போல, விளை யாட்டுத் துறையிலும் சிலர் இருந்து கொண்டு, இது பற்றி விமர்சித்தார்கள். விவாதித்தார்கள், விளக்கம் கூறினார் கள்.


பிறகு, வித்தை காட்டியவன் போனவுடன், வேடிக்கை பார்த்தக் கூட்டம் கலைந்து போவது போல், விளையாட்டுக் கள் பற்றிய பேச்சும் புகையாக மறைந்து போயிற்று.


மல்யுத்தம் நம் நாட்டின் தேசிய விளையாட்டாகும். காமா பயில்வான் என்றால், உலக வீரர்கள் இன்றும் தலை வணங்கும் அளவுக்கு உயர்ந்த ஆற்றல் படைத்தவர். அப்படிப்பட்ட வீரர்களை உருவாக்கியிருந்த இந்திய நாடு, இன்று எத்தனை அளவுக்குத் தரம் தாழ்ந்து போய்விட்டது.


மல்யுத்தப் போட்டிகளில் 7 பிரிவுகளில் முதல் சுற்றுப் போட்டியிலேயே இந்தியா இடமிழந்து போனது என்பது எவ்வளவு பெரிய அவமானம்! -


தென்கொரிய வீரர்கள் குத்துச் சண்டை போட்டிகளில் உள்ள பத்து பிரிவுகளிலும் தங்கப்பதக்கங்கள் வென்றார்கள் என்பது எவ்வளவு பெரிய வெற்றி!


ஏன் இந்த இழிநிலை? பழிநிலை?


ஆசியப் போட்டிகளுக்கு வந்த சில போட்டிகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சகோதரர்கள் வந்திருந்தனர். இரண்டு சகோதரர்கள் வந்திருந்தனர். ஒரே குடும்பத்தி லிருந்து என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.


குடும்பம் குடும்பமாக வெளி நாடுகளில் போட்டிகளுக்ே வருகின்றனர் என்றால், அங்கே விளையாட்டை மக்கள் விரும்புகின்றனர் என்பது தானே அர்த்தம்!