பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


பொறுப்பாளர்கள் பலரை உண்டாக்கி, சிறப்பாக போட்டிகள் நடத்திட உதவுகின்றன.


இவ்வளவு விஷயங்களையும் நம் இந்தியாவும் தான் செய்கிறது! இருந்தாலும் ஏன் இந்த நிலை!


எல்லா வீட்டிலும் இருப்பது போல அரிசி, பருப்பு, மிளகாய், பண்ட பாத்திரம் எல்லாம் இருந்தும், சமையல் மட்டும் வாயில் வைக்க முடியவில்லை என்றால், சமைப் பதில் உள்ள கோளாறு தானே காரணமாக இருக்கும்!


வசதிகள், வாய்ப்புகள், பங்கு பெறும் மக்கள், எல்லாம் இருந்தும் போட்டியில் கடைசி என்றால், தயாரிப்பில் தான் எங்கேயோ குறைகள் இருக்கின்றன!


நாம் குழந்தைகளை மறந்து விடுகிறோம்.


பள்ளிகளில் பயில்பவர்களைப் பற்றி, பாராமுகமாக இருந்து விடுகிறோம்.


சிறுவர்களின் பயிற்சிகள் பற்றி ஒதுக்கி விடுகிறோம்.


கல்லூரி காளையர்களைப் பற்றிக் கருத்து செலுத்துவதேயில்லை.


படிக்காத இளைஞர்களைப் பற்றிய பேச்சே இல்லை.


முன்னுக்குவந்த ஒரு சிலரை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பெரிய நாடகத்தை நடத்தி விடுகிறோம்.


வலிமை மிக்க சமுதாயத்தை உருவாக்க முனையாமல், வந்திருக்கும் பத்து பதினைந்து பேர்களுக்கு மட்டும் பணத்தை வாரி வாரி இறைத்து விட்டு, விளையாத வயலாக நாட்டு சக்தியை வீணடித்துக் கொண்டிருச் கிறோம்.