பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தோல்வியின் வகைகள்


1. தவிர்க்க முடியாத தோல்விகள்


2. தெரிந்தும் தடுக்க முடியாத தோல்விகள்


3. எதிர்பாராத தோல்விகள்


4. எதிர்பார்த்த தோல்விகள்


இவ்வாறு விளைகின்ற நான்கு:வகைத் தோல்விகளை, சற்று விரிவாகக் காணலாம்.


1. தவிர்க்க முடியாத தோல்வி (Inevitable defeat)


வாழ்க்கை என்பது ஒரு போராட்ட பூமி. பிரச்சினை களுடன் அல்லது பிரச்சினைகளைப் பிறப்பித்துக் கொண்டு பறக்கும் மனிதர்களுடன், போராடி வெற்றி பெறுகின்ற காரியம் தான் வாழ்க்கையாகும்.


வாழ்க்கையில் தெரிந்து நிற்கும் பிரச்சினைகள் மறைந்து நிற்கும் பிரச்சினைகள் என்று இருவகைப்படும்.


அவற்றை எப்படியெல்லாம் வெல்வது என்பதை, திட்ட மிட்டும் செய்யலாம், தீடீரென்று ஏற்படுவதற்கெல்லாம் தீவிரமான வேகத்துடனும் அனுசரித்துச் செயல்படலாம்.


ஆனால், தம்மை விட சக்தியுள்ளவர்களிடம் எப்படி போராடுவது? அப்பொழுது என்ன நேரிடும்?


வாழ்க்கையின் வழித்தடமான எல்லா விளையாட்டுச் களும், நமக்கு நல்ல வழிகாட்டிகளாகவே விளங்குகின்றன