பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 1 3


பள்ளிக்குள் நுழைகிற அந்தக் குழந்தையின் மீது கார் மோத, குழந்தையானது முன் சக்கரத்தில் அடியில் மாட்டிக் கொள்கிறது. பிரேக் போட்டும் நிற்காத கார், பிள்ளையின் மீது உருண்டு உருட்டிக் கொண்டு 20 அடி தூரம் போய் நிற்கிறது.


குழந்தையோ கார் சக்கரத்தின் கீழே கிடக்கிறது.


புலம்பிக்கொண்டே ஓடிய அந்தத் தாய். தன் குழந் தையை சக்கரத்தின் கீழிருந்து எடுக்க முயற்சிக்கிறாள். ஆவேசத்தில் பிடித்து இழுக்கிறாள். குழந்தை எப்படி வரும்? வெறித்தனமாக முயல்கிறாள்.


எப்படியாவது குழந்தையை வெளியே கொண்டு வர வேண்டுமென்ற வேகத்தில், இழுப்பதைப் பார்க்கிறாள் ஒரு பெண்.


ஓடி வருகிறாள். அந்தக் காரின் முன் பகுதியை அப்படியே தூக்கி நிறுத்துகிறாள். அந்த நொடிக்குள்ளே, பெற்றவள் தன் குழந்தையை எடுத்துக் கொண்டு விடுகிறாள்.


குழந்தை மருத்துவ மனைக்குக் கொண்டு போகப் படுகிறது, குழந்தை பிழைத்துக் கொள்கிறது.


போலீசாருக்கு பிள்ளை பிழைத்துக் கொண்ட ஆச் சரியத்தைவிட, காரைத்துக்கிய பெண்ணைப் பார்த்ததும், பெரிதும் வியந்து போனார்கள்.


5 அடி 3 அங்குல உயரம், 118 பவுண்டு எடையுள்ள அந்த மார்த்தாவிஸ் என்ற 44 வயது பெண், 4500 பவுண்டு எடையுள்ள கெடிலாக் காரை, எப்படி முன்புறத்தில் தூக்கினாள் என்பது தான் ஆச்சரியம்.