பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



இந்த மூன்று விதமான சான்றுகளும், மனிதர்களுக் குள்ளே மறைந்திருந்து வெளிப்படும் மகத்தான சக்தியையே வலியுறுத்திக் காட்டுகின்றன.


சாதாரண நேரங்களில், மனித சக்தி அவ்வளவாக வெளிப்படுவதில்லை.


வேண்டிய பொழுது, தேவையான தருணங்களில், ஆபத்து சூழ்நிலைகளில், தற்காப்புக்குரிய நேரங்களில் மனித சக்தி மிகுதியாக வெளிப்படுகிறது. விளையாடுகிறது. i.


இந்த சோதனை நேரங்கள், வாழ்க்கையில் மட்டுமல்ல விளையாட்டுக்களிலும் ஒடுகளப் போட்டிகளிலும் நிறையவே நேர்கின்றன.


மனிதத் துணை


குறிப்பாக, உடல் நலம் உள்ளவர்கள், அதிலும் உடல் பலம், வளம் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களிடையே இப்படிப் பட்ட சக்தி ஏராளமாகவே வெளிப்படுகின்றன. அதற்காகத் தான் விளையாட்டுப் போட்டிகள் மனித குலத்திற்கு மகிமை மிகுந்த துணையாக இருந்து உதவுகின்றன என்று மருத்துவ வல்லுநர்கள் விளக்குகின்றார்கள்.


எப்படி இது ஏற்படுகிறது என்பதை ஆய்வு பூர்வமாகக் காண்போம். ஒர் உலக சாதனை செய்யும் ஒடுகளப் போட்டியாளர் ஒருவர், குறிப்பிட்ட அந்தப் போட்டி சம யத்தில், உடலாலும் உள்ளத்தாலும் உணர்வாலும் உச்சக் கட்டத்திலே உலா வருகின்றார் என்பது தான் அந்தக் கண்டு பிடிப்பாகும்.


அத்தகைய உச்சக்கட்ட உணர்வுகள் உண்டாக்கும் உந்துதல்களுக்கேற்ப, உடல் உறுப்புக்கள் ஒத்துழைத்து உயர்வாக உழைப்பது தான் உண்மையான ரகசியமாகும்.