பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

15



சாதாரண மனிதர்களால் சிறிதளவு கூட சமாளிக்க முடியாத அந்த சக்தி, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு எப்படி கிடைக்கிறது? அது என்ன தந்திரமா? மந்திரமா?


இத்தகைய எழுச்சி மிக்க சக்தி எப்படி கிடைக்கிறது என்றால், அதை ஆராய்ந்த அறிஞர்கள், ஒரு புதிய பெய ரைச் சூட்டியிருக்கின்றார்கள். அதற்குப் பெயர் அறிவார்ந்த 6#\ : (The Law of Rationality).


எப்படி நடைபெறுகிறது?


நன்கு பயிற்சிப் பெற்ற சிறந்த விளையாட்டு வீரர் களுக்கு ஏற்படுகின்ற இக்கட்டான சூழ்நிலைகளில் ஏற்ற முடன் வெற்றி காண, உடலில் உள்ள சில தற்காப்பு வால்வுகள் திறந்து கொண்டு, திறமையுடன் செயல்படத் துண்டுகின்றன. இப்படிப்பட்ட மறைமுகமான செயல் திறன்களை மிகுதிப்படுத்திக் காட்டுவது தான் அறிவார்ந்த விதியின் அப்பட்டமான முயற்சியாகும்.


இன்னும் விரிவாக இந்த விதியினை அறிந்து கொள்


வோம்.


அதிக உச்சக்கட்ட சூழ்நிலைகளில் உண்டாகும் உணர்வு நிலை (Super Tension)க்கு ஈடு கொடுப்பது போல, நரம்பு


களும், தசைகளும் அதிவேகமாக ஈடுபட்டு, அதி அற்புத மான ஆற்றலை உண்டுபண்ணி விடுகின்றன.


இதில் என்ன விசேஷம் என்றால், ஒவ்வொரு இயக்க மும் அடிப்படைத் தேவைக்கு ஏற்பவே நடைபெறுவதுதான். நடைபெற்றுக் கொள்வதுதான்.