பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"I 68 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உடல் தசை நாரின் சக்தியை எந்திரங்கள் மூலமாகத் துல்லியமாகக் கண்டு பிடித்து, விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் மேல் நாட்டுப் பயிற்சி முறை. புதுப் புது உத்திகள், வைட்டமின் சக்திகள் மற்றும் உடையால் உணவால், வசதியால், உற்சாகத்தால் வீரர்கள் பெறுகின்ற மனோ பலங்கள்.


நம்மவர்களுக்கு போட்டிகளுக்குப் போகின்ற போது தான், புதிய வசதிகளைப் பார்க்கின்ற வாய்ப்பே கிடைக் கிற அங்கே போனவுடன் அந்த அமைப்புகளை பார்த்த வுடன், உள்ளத்திலே முதலில் ஏற்படுவது தாழ்வு மனப் பான்மை .


\ வேறு நாடுகளுக்குப் போனவுடன், நம் நாட்டு.


வீரர்கள் விரும்பாத உணவு தான் மேஜை மேல் வைக்கப் படுகிறது. உணவு குறைந்தால் உடலில் ஆற்றல் எப்படி தங்கும்? இன்னும் பல வசதிக் குறைவுகள். நமது வீரர்களை யும் வீராங்கனைகளையும் பேயாக ஆட்டுவிக்கின்றன.


தன்னம்பிக்கை


இந்திய நாட்டு இளைஞர்களை உற்சாகப்படுத்துகின்ற உயர்ந்த எழுச்சி பொது மக்களிடம் போதுமான அளவு இல்லாதது பெருங் குறையே.


ஆற்றல் உள்ள வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் காணப் படும் பாரபட்சம், பாகுபாடு, சில சமயங்களில் பண்பற்! முறைகள் பல இளைஞர்களிடையே வேகத்தை, வீழ்த்தியே விடுகின்றன.


பொதுவாக, இளைஞர்களிடையே தன்னம்பிக்:ை இல்லை. தன்னால் உலக அளவில் உயர முடியும் என்! எழுச்சி இல்லை.