பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா.


இப்படியாக தேர்வுகளும், முடிவுகளும் சுற்றிச் சுற்றி வலம் வருகின்ற சூழ்நிலையில், இந்தியா ஜெயிக்குமா?


இந்தியா ஏன் தோற்கிறது என்றால் இங்கே கூறப் பட்டிருக்கும் காரணங்கள் ஒரு சில தான்.


அரசாங்கம் உதவவில்லை என்று அரற்றுவதால் மட்டும் பயன் எதுவும் வந்து விடுவதில்லை. o


விளையாட்டு என்பது தனிப்பட்ட உடலாளர்கள் -


வீரர்களின் உழைப்பினால் தான் மேன்மையடையும். கண்ணாடி போட்டு விடுவதாலே, அவர்


குருடருககு வேகமாக நடந்து போய்விட முடியாது. நொண்டிக் குதிரைக்கு வெள்ளியலங்கார மெத்தைகள் போட்டு


விடுவதினாலே, அதற்கு வேகம் வந்து விடாது.


தன்னம்பிக்கையிலும் நம்பிக்கை ான் தாங்கினாலும், எந்தவித


தன்னை உயர்த்திக் கொள்ள, தகுதியை வளர்த்துக் கொள்ள, ஓர் உன்னத இலட்சியத்திற்காக அன்றாடம் கிடைக்கின்ற அற்ப சந்தோஷங்களைத் தியாகம் புரிகின்ற வலிய மனம் படைத்த வல்லமை மிக்க வீரர்சளும் வீராங்கனைகளும் எப்பொழுது, இந்தியத் திருமண்ணில் எண்ணிக்கை அளவில் நிறைகின்றனரோ. அப்பொதுதான் இந்தியா ஜெயிக்கும்.


மேற்காணும் குறைகளுக்கு நாம் எப்பொழுது தீர்6 காண்கிறோமோ, அப்பொழுது தான் இந்தியா ஜெயிக்கும் காலம் கனியும் என்றுகாத்திருப்போ!’ அல்லது கடமை!ை


ஆற்றுவோமே! முடிவை உங்களுக்கே விட்டு விடுகிறோம்.'