பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 76 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


1985ம் ஆண்டு முழுவதும் ஒய்வு. ஒட்டப்பந்தயக்களம் பக்கமே வராதபடி குடும்பப் பொறுப்பு. குழந்தை வளர்ப்பு.


இதற்கிடையிலே எழும் நினைவுகளில் ஒரு பொழுதும் நீங்காத ஒரு நினைவு-மீண்டும் போட்டிகளில் கலந்து கொண்டாக வேண்டும். வெற்றி கண்டாக வேண்டும் என்பதாக அந்த நினைவு, இலட்சியப் பொறியாக விழுந்து எரிந்து கொண்டிருந்தது.


உழைப்பும் பயிற்சியும்


1986ம் ஆண்டு வந்தது. கட்டாயமாக, கடுமையாக பயிற்சிகள் செய்தாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டாகிவிட்டது. கணவனும் சம்மதம் தந்தாயிற்று. அத்துடன், அவளது பயிற்சியாளராகவும் ஆகியாயிற்று.


இடைவிடாத பயிற்சி. இன்முகத்தோடு தொடர்ந்து நடத்திய கடுமையான பயிற்சி விளைவு...


1986ம் ஆண்டு கலந்து கொண்ட 100 மீட்டர் ஒட்டட் போட்டிகளில், 15ல் கலந்து கொண்டு 14 போட்டிகளில் வெற்றி சாதனை.


200 மீட்டர் ஒட்டங்களில், 9 போட்டிகளில் கலந்து கொண்டு 8 முறை வெற்றி.


100 மீட்டர் சாதனை 10, 88 நொடிகள்.


200 மீட்டர் சாதனையும் அப்படியே உயர்ந்திருந்தது


காரணம் :


தாயான பின்னர், தான் இன்னும் வலிமை பெற்றிருப்பதை உணர்ந்ததாகவும்; தான் ஒடுகிற வேகத்தை