பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஆண்களுக்கு வலிமை அதிகமா!


ஆண்களும் பெண்களும்


‘ஆதாம் என்ற ஆண் மகனின் விலாஎலும்பிலிருந்து. உருவாக்கப்பட்டவள் ஏவாள் என்ற பெண்’ என்று


வேதாகமம் பெண்ணின் தோற்றம் பற்றி பேசுகிறது.


பெண்ணானவள் மெலிந்த பாண்டம் (Weaker vessel) என்று தாழ்த்திப் பேசுகிற தத்துவங்களும் உண்டு.


பஞ்சு, பழம், மேகம், நீராவி, மலர், நிலவு என்றவாறு மென்மையான பொருட்களுடன், கற்பனை நயம் மிளர உவகை காட்டி மகிழ்வார்கள் கவிஞர்கள்.


ஆண்மை நிறைந்திருப்பதாலேயே ஆண்கள் என்றும், பெண்மையும் மென்மையும் கலந்திருப்பதால் தான் பெண்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். என்றாலும் அதிக வலிமை படைத்தவர்கள் ஆண்களா? பெண்களா?