பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. பெண்கள் புகை பிடிக்கலாமா ?


என்ன கேள்வி இது ?


புகை பிடிப்பதே பெருந்தவறு என்று விளம்பரம் செய்கிற இந்தக் காலத்தில், பெண்கள் புகை பிடிக்கலாமா என்றால் எப்படி?


பெண்கள் புகை பிடிக்கும் பழக்கம், ஆதிகாலப் பெண் களிடமிருந்து அருமையாகத் தொடர்ந்து வந்திருக்கிறது என்பதாக ஒர் ஆய்வு செய்திருக்கிறார்கள்.


பழங்குடிப் பெண்கள் புகை பிடிக்கும் பொழுது, தாங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுகின்ற உணர்வைப் பெறுவதாக இருக்கிறது என்பதால்தான், புகை பிடித்தார் கள் என்பதுதான் அந்த ஆய்வு. அதுவும், அவர்களிடையே ஒரு சமூக அந்தஸ்தாக இருந்தது என்றும் கூறுகின்றார்கள்.