பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 84 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


தற்காலப் பெண்கள்


ஆனால், தற்காலப் பெண்கள் ஏன் புகை பிடிக்கின்றார் கள்? என்றால், அது சமத்துவம் காண்பதற்காக. அதாவது ஆண்களுக்குப் பெண்கள் சமம். ஆண்களுக்குப் பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காக!


சரிநிகர் சமானம் என்பதில் சந்தோஷப்படுகிற பெண்கள், குடியிலும் புகையிலும் ஈடுபட்டு, ஆண்கள் போலவே அத்தனை நோய்களுக்கும் ஆளாகி அவதிப்பட்டு, அகால மரணமடைகின்றார்கள் என்பதை ஏனோ மறந்து போகின்றார்கள் !


அமெரிக்கப் பெண்களில் நுரையீரல் புற்று நோய் ஏற்பட்டு சாவது இரு மடங்காகியிருக்கிறது. என்கிற புள்ளி விவரம், புகைப்பதின் பொல்லாங்கை, பேரபாயத்தை யல்லவா எடுத்துரைக்கிறது?


அதிலும், கடந்த இருபது ஆண்டுகளில். பெண்களின் புகைக்கும் பழக்கம், பொங்கி வரும் காட்டாற்றின் வேகம் போலல்லவா பெருகிக் கொண்டு வந்திருக்கிறது.


இப்படியே போனால், புகைக்கும் ஆண்களின் எண்ணிக் கையை விட, பெண்களின் எண்ணிக்கைப் பெருகிப் போய் விடும் என்பதாக ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


வேலைக்குப் போகிற பெண்களில், நுண் திறன் கொண்ட தொழில், சாதாரண எடுபிடி வேலை செய்பவர் கள், என்பவர்களுக்கிடையே புகைக்கும் பழக்கம் அதிக மாகிக் கொண்டு வருகிறது என்ற ஆய்வுக்குரிய காரணங் களையும் நாம் அறிய வேண்டும்.