பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி m I 7


மாக எறிய முடிகிறது. எறியும் ஒவ்வொருவருக்கும் எறியும் திறன், திறன் நுணுக்கம் என்று பல முறைகள் உண்டு.


85 மீட்டர் தூரம் எறிவது என்றால் அது உலக சாதனைதான். இப்பொழுது 100 மீட்டர் துாரம் வரை வேலெறிகிறார்கள் என்றால், அது எப்படி முடிகிறது?


சாதாரண வீரனை விட சாதனை புரியும் வீரன் எப்படி இதை சாதிக்கிறான்?


சாதாரண மனிதன் ஒருவன் வேலைப்பிடித்து தூக்கி எறிகின்றான் என்றால், அவனது கைபலம், கால்பலம் இவற்றுடன்தான் எறிகிறான். அதாவது அவனது எறியும் வேலைக்குப் பயன்படுவன. 5 முதல் 7 தசைகள் தான், எறிய ஒத்துழைக்கின்றன.


ஆனால், சிறந்த சாதனை புரிபவன் எறியும்பொழுது, கை, தோள்பகுதிகள், கால்கள், முதுகு போன்ற பகுதிகள் ஒத்துழைக்க, ஏறத்தாழ 70 தசைகள் பயன்படுகின்றன என்று விளையாட்டு ஆராய்ச்சி வல்லுநர்கள் கண்டு பிடித்திருக்கின்றார்கள்.


அத்தனை தசைகளும் அற்புதமாக ஒத்துழைத்து, உச்சக் கட்ட எழுச்சி மிக்க சக்தியை படைத்துவிடுவதால் தான், இப்படிப்பட்ட சாதனைகள் நிகழ்ந்து விடுகின்றன.


மேலும் ஒரு அற்புதமான குறிப்பைப் பார்க்கலாம்.


ஒருவர் உயரம் தாண்டும் போது, காலினை அவர் தரை யில் எவ்வளவு வேகமாக அழுத்தி, ஊன்றுகிறாரோ, அந்த அளவுக்குத்தான் மேலே எழும்பித் தாண்ட முடியும்.


இப்பொழுதெல்லாம் 2.35 மீட்டர் உயரம் சாதனை இருக்கிறது. அதற்கு எவ்வளவு கால் சக்தி வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.