பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



உயரம் தாண்டும் ஒரு ஒப்பற்ற வீரன், கீழே தரையை உதைக்கும் வேகத்தையும் நேரத்தையும் அளந்து கண்டு பிடித்துக் கூறியிருக்கின்றார்கள்.


அதாவது 0.139 நொடி நேரத்தில் விளாதிமார் யாஷ் செஸ்கோ என்னும் அந்த உயரம் தாண்டும் வீரன். உதைத்து மேலே எழும்பிய சக்தியானது 730 கிலோ கிராம் எடையை


மறுபுறம் தள்ளியதற்கு இணையாக இருந்ததாம்.


730 கிலோ எடையை உதைத்துத்தள்ளும் ஆற்றல் அந்த வீரனுக்கு எப்படி வந்தது? பயிற்சிதான். உடற்பயிற்சி


தான்.


உடற்பயிற்சியும், அவற்றை ஒருமுகப்படுத்திய உணர்வு களும், உள்ளத்தை உணர்வு மயமாக்கி உற்சாகப் படுத்தும் இலட்சிய வேட்கைகளும் தாம், ஒருவரை மிகுந்த சக்தி படைத்த மகா வீரராக மாற்றிவிடுகிறது.


எப்பொழுது முடியும்?


சிலரால் பழக்கமும் பயிற்சியுமிருந்தும் ஏன் சாதிக்க முடியவில்லை என்றால், அவர்கள் மனதால் தயாராகாமல் இருப்பதுதான். உடலில் சக்தி இருந்தாலும், பயிற்சி நிறைந் திருந்தாலும், மனதால் அவர்கள் பக்குவப்படவில்லை என்றால், 100ல் 70 அல்லது 80 சதவிகிதம் வீணாகித் தானே போகிறது.


ஆகவே, சந்தர்ப்பங்கள் தாம் சராசரியான மனிதர் களை, சாதனை வீரர்களாக மாற்றி வைக்கின்றன. அப்படிப் பட்ட அருமையான சூழ்நிலைகளை விளையாட்டுத் துறை தான் ஏராளமாகவே வழங்குகின்றன.