பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 00 டாக் டர் | 6 . நவராஜ Woo, or *- - - -


எல்லோரும் ஒய்வுடன் இருக்கவும் இறைவழிபாடு செய்யவும். வேண்டும் என்று தடை விதித்திருந்தனர். வழி வகுத்திருந் தனர். அத்துடன், விடுமுறை நாட்களும் அவர்களுக்கு இருந்தன. விருப்பமான விழாக்கள் நடைபெற்றன. அவை எல்லாம் மக்களை மகிழ்விப்பதற்காகவே ஏற் படுத்தப்


t_i L-L-os.


குழந்தை விளையாட்டுக்கள் :


குழந்தைகள் விளையாட்டுக்களில், பொம்மைகளே அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன. கவர்ச்சியான பொம்மைகள். கலகலவென சப்தம் போடுபவைகளாகவும், விசில் ஊதல் போன்ற அமைப்பில் சத்தம் எழுப்புவனவாக வும், அமைந்திருந்தன.


அப்படிப்பட்ட சப்தமிடும் பொம்மைகள், ஒவ்வொரு பக்கத்திலும் சிறு துவாரம் உள்ள பொம்மைப் பெட்டிகளாக வும், சில பொம்மைகள் மனிதப் பொம்மைகள் போன்றும். பறவைகள் போன்றும் அமைப்பினைக் கொண்டிருந்தன. சில பொம்மைகள் தூக்குவதற்கு சிரமப்படுகின்ற அளவில் கனமுடையவையாகவும் இருந்திருக்கின்றன.


பெண் குழந்தைகள் பொம்மைகளுடன், வீடு போன்ற அமைப்புக்களை வைத்து விளையாடியிருக்கின்றனர். சமைய லறை சாமான்கள், தட்டுமுட்டு சாமான்களை வைத்துக் கொண்டு விளையாடினர். அவைகள் எல்லாம் மண்ணால் செய்யப்பட்டிருந்தன.


இப்படிப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் கி.மு. 900த் திற்கும் கி.மு. 600ம் ஆண்டிற்கும் இடைப்பட்டதாசி இருந்தன என்பதை அகழ்ந்து ஆராய்ச்சி செய்கிற ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறுகின்றனர்.