பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 201


பொம்மலாட்டம்


சில பொம்மைகளில் கைகள், கால்களுடன், தாடியும் அமையப் பெற்றவையாக ஆக்கப்பட்டிருந்ததுடன், அவற்றின் தோள்புற மேற் பகுதியில், துளைகளும் போடப் பட்டதாகக் காணப்படன. அவைகள் ஒருவேளை, நூல் களைத் துவாரத்தில் கோர்த்து, ஆடச் செய்கிற பொம்ம லாட்டத்திற்குப் பயன்பட்டிருக்குமோ என்று வினா எழுப்பி விடைதேடவும் அறிஞர்கள் முயன்றிருக்கின்றனா. அவைகள் மதசம்பந்தமான விழா நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்பதும் ஒர் ஆய்வு. ஏனெனில், மனித வாழ்வோடு மதம் அக்காலத்தில் ஐக்கியமாய் இருந்ததும் ஒரு காரணமாக அமையும்.


பந்து விளையாட்டுக்கள்


எகிப்து நாட்டிலே கற்களால் செதுக்கி வழவழப் பாக்கப்படும் நிலைமையையும் பெற்றிருந்தன. கல்லால் ஆன கோலிக் குண்டுகளை உருட்டி ஆடுகின்ற தன்மையில்,


பல்வேறு விதமான விளையாட்டு வகைகள் விளங்கியிருக் கின்றன.


ஒரு சுவற்றில் 3 விதமான வளைவுகள் அமைக்கப் பட்டிருக்கும். அந்த வளைவுக்குப் பின்புறமாக, இந்தியன் கிளப்"புகள் போன்ற வடிவில், கூம்பு வடிவமுள்ள குட்டை “” கட்டைகள் நிறுத்தப்பட்டிருக்கும். சுவரின் ஒரு புறத்திலிருந்து கோலிக் குண்டை (வளைவுகள் வழியாக * கட்டி மறுபுறம் நிற்கின்ற கட்டைகளை கீழே சாய்த்து விடுவதுதான் விளையாட்டு முறையாகும்.


சில்லு ஆட்டம் பாண்டி ஆட்டம் என்கிற ஆட்டம்


அங்கே விட்டுக்கு வெளியே ஆடுகிற வெளிப்புற ஆட்டமாக


D- 1 3