பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


திருக்கிறது. அதாவது அதிக தூரத்தில் ஒரு பொருளை வைத்து, அதைக் குறிபார்த்து அம்பெய்தி வீழ்த்துகிற ஆற்றல் மிகு வித்தையை, மகிழ்ச்சிக்காகப் பழகி வைத்.


திருந்தார்கள்.


மல்யுத்தம்


ஆதிகாலத்திலிருந்தே, மல்யுத்தம் அனைத்துலக மக்களாலும் போற்றப் பட்ட பெரும் யுத்தமாகவே இருந்து வந்திருக்கிறது. இராமாயணம், மகாபாரதம் என்கிற இதிகாசங்களில், சண்டை முழுதும் மல்யுத்தமயமாக இருப்பதை நாம் நன்கறிவோம்.


பையிள் கால மக்களுக்கு மிகவும் பிடித்தமான சண்டையாக, மல்யுத்தம் இருந்திருக்கிறது.


பாபிலோன் மக்கள், அடுத்தவருடைய இடைவாறைப் (Belt) பிடித்து மல்யுத்தம் செய்தார்கள்.எ ன்பது முக்கிய மான சான்றாகும்.


யாக்கோபு (Jacob) என்பவர் செய்த மல்யுத்தமானது சிறப்பான சான்றாக பைபிளில் இருக்கிறது. அந்த யுத்த நிலையை, கீழ்வருமாறு ஆதியாகமத்தில், 32 ம் அதிகாரத்தில் 21 முதல் 25 வசனம் வரை நாம் காணலாம்.


யாக்கோபோ, அன்று ராத்திரி பாளையத்திலே தங்கி; இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவி களையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரர்களையும் கூட்டிக் கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான். அவர்களையும் சேர்த்து ஆற்றைக் கடக்கப் பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்


படுத்தினான்.