பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


புத்தம் பண்ணுவது பொழுது போக்குக்காக, மற்ற வர்கள் பார்த்து மகிழ்வதற்காக, என்ற நிலையில் கிரேக்க நாட்டில் அன்று கிளைத்தெழுந்தது, இதை பால் என்பவர் Spectacle என்கிறார். அதாவது வேடிக்கைக் காட்சி என்கிறார் (கொரிந்தியர் அதிகாரம் 4:9). இதை வெறுத்த வர்கள் அதிகம். வரவேற்றவர்கள் குறைவுதான்.


அக்காலத்தில் யூதர்களிலே இரு பிரிவினர் இருந்தனர். அதாவது சட்டங்களையும் மதவிதிகளையும் அப்படியே கடை பிடிப்பது. சபாத் என்கிற ஒய்வு நாளன்று, வீட்டிலே தீபற்றவைப்பது, ஒரு அரைமைல் தூரம் நடப்பது, ஏதாவது சிறு கனமான பொருட்களைத் துக்கிச் செல்வது எல்லாம் வேலையாக (Works) கருதப்பட்டு, தண்டனைக்குரிய செயல்கள் என்று கடுமையாகப் பின்பற்றியவர்களை பெரிசீஸ் (Pharisees) என்று அழைத்தனர். அதாவது தனித்துப்போனவர்கள் என்று அர்த்தம்.


இந்தப் பெரிசீஸ் பிரிவினர் தான், ஏசுவின் வாழ் நாட்களில், அதிக எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள். அவர் களின் எதிர்ப்பைத்தான் ஏசுவானவர் அதிகம் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தப் பிரிவினர்தாம், போட்டிகளும் வேண்டாம். சாட்சிகளும் அதனால் கிடைக்கும் களிப்புகளும் மக்களுக்குத் தேவையில்லை என்று மறுத்தவர்கள்.


ஆனால் அவர்கள் கொள்கைகளுக்கு மாறாக வாழ்ந்த வர்கள் சட்ெயூயிஸ் என்று அழைக்கப்பட்டனர். மத குருக்களுக்கு அவர்கள் வேண்டியவர்களாக இருந்தாலும், பெரிசீஸ் பிரிவினரை அதிகம் எதிர்த்து வாழ்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் போட்டிகளையும், அவை பொழியும் இன்பங்களையும் வரவேற்றனர்.


மக்களின் மகிழ்ச்சிக்கு மன்னர் உதவுவது தாடே மாண்பு, ஹீராடு (Herod) என்ற மன்னன், சண்னை போடுவதற்கு என்று பெரிய விளையாட்டரங்கம் (Stadium) ஒன்றைக் கட்டினான். பார்வையாளர்கள் பகுதியையும்


அமைத்தான்.