பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலில், பிரபுக்கள் வம்சத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டு. (Gladiators), அவர்களுக்குள்ளே சண்டை போட வைத்து, சந்தோஷப் பட்டனர். அந்தநிலை அதிகமாக நீடிக்கவில்லை.


எதிரி நாட்டினருடன் போரிட்டு அங்கே சிறைப்பிடித்த கைதிகளைக் கொண்டு வந்து, அவர்கள் சண்டையிடுவதில் சமர்த்தர்களாக, தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தால், அவர்களுக்குள்ளே சண்டை போடச் செய்து, இரத்தம் கொட்ட வைத்து, வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர்.


அடிமைகளிடையேயும் ஆக்ரோஷமான வகையில் சண்டை போடச் செய்தனர். இன்னும், குற்றவாளிகளைக்


கொண்டு வந்து, அவர்களிடையேயும் சண்டையிட வைத்தனர்.


இப்படிப்பட்ட கண்காட்சியில், அவர்கள் பெற்ற மகிழ்ச்சியில் திருப்தி ஏற்படவில்லை போலும், மனிதர் களுக்கும் இடையே சண்டை போடச் செய்து, மனிதனும் விலங்கும் துன்புற்று சிறிது சிறிதாக மடிவதைப் பார்த்து மன திருப்தி அடைந்தனர்.


தேரோட்டப் போட்டி


Chariot என்று அழைக்கப்படுகிற சிறு தேர்ப் போட்டி களை நடத்துவதற்காக, ஜெருசலேமில், ஹிராடு என்ற மன்னன், தேரோட்ட அரங்குகளைக் கட்டித் தந்தான். இதை அப்பொழுது Amphitheatre என்று அழைத்தனர்.


குதிரைகள் பூட்டிய சாரட்டுகளின் மீது நின்று கொண்டு, புயல் வேகத்தில் ஒட்டிக் கொண்டு வரும் போட்டிப் பந்தயம் இது. (நம் நாட்டு மாட்டு வண்டி பூட்டிய ரேக்ளா போட்டியை நினைவு படுத்திக் கொள்க) இதில் ஏற்படும் மோதல்கள், சிதறல்கள், சேதங்கள். மரணங்கள் எல்லாம் மக்களுக்கு சுவையான காட்சிகளாகும்.