பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. முதுமையை விரட்டுவோம்: இளமையைத் திரட்டுவோம்!


இளமையை நாம் மதிக்கிறோம். ரசிக்கிறோம், இளமையே வா என்று வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம். விட்டு விடாமல் பிடித்துக் கொள்ள முயல்கிறோம். அதில் மகிழ்கிறோம்!


ஆனால் இளமை இருப்பதை முதுமை விரும்புவதில்லை.


இருப்பவர்கள் முதுகில் வந்து ஏறிக்கொண்டு, முதுமை நடமாடிக் கொண்டிருக்கிறது. இளமையின் காதைப்


பிடித்து, இதமாகத் திருகிக் கொண்டிருக்கிறது.


கொஞ்சம் ஏமாந்தால், இளமையை விரட்டி விட்டு முதுமை இடம் பிடித்துக் கொள்கிறது. வெல்கிறது.


எனவே, எல்லாம் என்னால் முடியும் என்று வீறாப்புர பேசிக் கொண்டு தேகத்தைக் கவனிக்காமல் விட்டு விடுகிற வர்களை, முதுமை சீக்கிரமாகப் பிடித்துக் கொள்கிறது.