பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(J ού)


றந்து திடக்கும் மனித சக்தி 2I


ஆடற்பயிற்சியை ஓரிடத்தில் நின்று கொண்டும் செய்ய , திடகாத்திரமுள்ளவர்கள், வலிமையான பயிற்சி களை, எடை மிகுந்த பயிற்சிகளைச் செய்யலாம், வலிமை குறைந்தவர்கள் வயதானவர்கள் நடக்கலாம். மெதுவாக நடக்கலாம்.


சற்று வியர்வை வெளிவருவதுபோல, மூச்சிறைப்பது போல, வேகமாக நடக்கலாம்.


முடிந்தால், மெதுவாக ஒடலாம். (logging) கால்கள் வலிப்பதுபோல் இருந்தால் நிற்கலாம். அதாவது முடியும் போது ஒடலாம். முடியாத போது நிற்கலாம் என்பன போன்ற ஒட்டப்பயிற்சிகளையும், உடற்பயிற்சிகளையும் செய்யலாம்.


கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.


மனிதர்கள் சிலர் வயதானவர்கள் என்பதாகத் தான் தெரிகிறது. ஆனால் அவர்கள் முகத்தில் பாருங்கள், வலிமையானவர்கள் போன்று தெரிகிறதல்லவா!


வேகமாக வருகிற முதுமையை நிறுத்த முடிந்தவர்கள் அவர்கள். முதுமையை விரட்டுகிற சாமர்த்தியம் நிறைந்த வர்கள் சக்தியை சேகரிக்கும் சித்து வேலையான சக்தி வேலையைக் கற்றவர்கள்.


வயதானால் என்ன? அதனால் முதுமை வந்தால் என்ன? முகம் சுளிக்காமல், அகம் வலிக்காமல், சோகம் கலக்காமல், வேகமாக வாழ முடியும் என்ற விவேகமான வழியைப் பின்பற்றி வளமாக வாழும் சிறந்த மனிதர்கள் இவர்கள்.


நீங்களும் ஒடிப்பாருங்கள். உண்மை புரியும்.