பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 27


எலும்புகளில் மிக முக்கியமானது முதுகெலும்புத் தண்டு. இந்த முதுகுத் தண்டு முற்றாமல், எளிதாக வனைத்தி நெகிழ்ந்து கொடுக்கிற வரை, இளமை உடலில் உற்சாக நடை போடும்.


முள்ளந் தண்டு என்று அழைக்கப் படுகிற Spinal Cord, முற்றாமல் வளையும் தன்மை பெற்றிருக்கும் வரை, முதுமை உடலை நெருங்கவே நெருங்காது.


முள்ளந் தண்டு முற்றி விட்டால், விறைப்புத் தன்மை அடைந்து விட்டால், வளைந்து நெகிழ்ந்து கொள்ளத் தவறி விட்டால், முதுமை பதமாக வந்து முதுகில் ஏறிக் கொள் கிறது. முதுகுப் பிடிப்பு, முற்றிய முதுமையைக் கொண்டு வந்து கொடுத்து விடுகிறது.


இப்படி எலும்புகளை விறைப்புத் தன்மை அடையாமல் உடற்பயிற்சி செய்து விடுகிறது. எலும்புகளை வலிமை யாகவும் மாற்றி விடுகிறது.


நிறைய உயிர்க்காற்றை நுரையீரலுக்குள் கொண்டு வந்து உடற் பயிற்சி சேர்க்கிறது. இரத்த ஓட்டத்தை விரைவு படுத்துகிறது. உடலின் கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்றி, தேகத்தைத் தூய்மையாக்குகிறது.


நோயற்ற வாழ்வை நிதமும் தருகிறது. மனத்தை உற். சாகப் படுத்துகிறது. மகிழ்ச்சியான மனதுக்குக் கவலைகள் இல்லை. குழப்பங்கள் இல்லை. குதுகலமே எல்லை.


ஆகவே தான், உடற்பயிற்சி செய்பவர்கள் எப் பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். சோம்பலைத் தவிர்க்கிறார்கள். சுகத்தில் திளைக்கின்றார்கள்.