பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அவர்கள் உடலும் மனமும், அவர்கள் கட்டுப்பாட்டிற் குள்ளே இருக்கின்றன. நல்ல இலட்சியங்கள், நயமான கொள்கைகள், நிதமும் அவர்களை திருப்தியான செயல் களுடன் வழி நடத்துகின்றன.


இந்த இனிய நிலையைத்தான் இளமை என்கிறோம். இப்படிப் பட்ட இளமை, எந்த வயதுக்கும் எந்த காலத் துக்கும் சொந்தமானதாகும்.


எளிமையாக இளமையைக் காத்துத் தரும் உடற் பயிற்சியே, உங்கள் உற்ற தோழன் உயிர் நண்பன். நல்ல நண்பன் நாலாயிரம் கோடிக்குச் சமம்.


நீங்கள் குதுகலம் நிறைந்த கோடீஸ்வரர்களாக வாழுங்கள். இளமைக்குள் வாழும் இலட்சாதிபதியாக வாழுங்கள். இதைவிட இன்பம் இந்த உலகில் வேறென்ன இருக்கிறது!