பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர். எஸ். தவராஜ் செல்:ையா


வழுக்கை அல்லது முடி இழப்பு எப்படி ஏற்படுகிறது என்று அறிவதற்கு முன், முடி உதிர்கிற சில பிரிவுகளைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.


1, பூச்சிக்கடி என்பார்கள். தலையில் ஆங்காங்கே முடி கொட்டிப் போய்விடும். அவற்றை சொட்டை என் பார்கள். குழந்தைகளுக்கும் சில வாலிபர்களுக்கும் இது நிகழ்வதுண்டு. மருந்து போட்டால் இந்த இழப்பு குண மாகிவிடும். .


2. டைபாய்டு. மலேரியா, சிபிலிஸ் போன்ற நோய்கள் ஏற்படுகின்றபோது, முடி கொட்டிப் போகும். ஆனால், மீண்டும் முளைக்கின்ற வாய்ப்புக்கள் உண்டு.


3, வயதான பெண்களுக்கு. அதாவது மாதவிடாய் தின்று போன பெண்களுக்கு முடி கொட்டிப் போவதும், தலையில் முடி குறைந்து அடர்த்தியற்றுப் போவதும் பொது வாக ஏற்படுவதுண்டு. இதற்கான காரணம் அவர்கள் உட வில் சுரக்கின்ற ஹார்மோன்களின் பணியில் தடுமாற்றம் ஏற்படுவதுதான், தலையான காரணம் என்று கூறப்படு கிறது. இதற்குத் தகுந்த வைத்தியம் இல்லை என்றும் கூறு கின்றார்கள்,


4. பிரசவ காலத்திற்குப் பிறகு, தாய்மார்களுக்கு ஏற்படுகின்ற முடி இழப்பு, பிரசவ நோத்தில், உடலில் உள்ள ஹார்மோன்கள் நிலைமாறுகிற போது, முடி இழப்பு ஏற் உடும், சிறிது காலத்திற்குப் பிறகு ஹார்மோன்கள் சரியான யான நிலைக்கு வந்து சேர்கிறபோது, முடி முளைக்க ஆரம் வித்து, இழப்பை சரிகட்டிவிடும்.


.*.


மூடி எத்தனை வகை!


மூன்று வகையாகப் பிரித்திருக்கின் ருர்கள்.