பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து இடக்கும் மனித சக்தி 23?


இளமையை விட்டு விடவும் கூடாது. முதுமையை வர ஒடவும் கூடாது என்று சிந்திக்கிறோம். இயற்கையை இந்திக்கிறோம்.


இருந்தாலும், எதிர்ப்புகளுக்கு இடங்கொடுக்காத முதுமை, “இதோ இருக்கிறேன்’ என்று கூறிக் கொண்டே முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு, சந்தோஷ சவாரி செய் கிறது. நினைவுகளோ சஞ்சலப் பாதையில், சாய்ந்தாடும் நிலைமையிலே சமத்காரமாக மெளன ஊர்வலம் போகின்றன.


பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே பறி போகின்ற இளமையை, பத்திரமாக பாதுகாத்திட முடியுமா? நிச்சயம் முடியும்.


முடியும் என்றால், அதற்கான மார்க்கம் தான் என்ன?


மருந்துதான் வழி.


விருப்பத்துடன் அந்த மருந்தினை மேற் கொண்டால், வாழ்வில் நிச்சயம் ஒரு சிறப்பான திருப்பம், நிகழ்ந்தே விடும்?


அது எப்படி முடியும்? எவ்வளவு முடியும்.


வயது குறைகிறதா என்ன?


ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வயதாகி விட்டதோ,


அதிலிருந்து 10 முதல் 25 வருடங்கள் குறைந்தாற் போன்ற இளமையாய் தோன்ற முடியும். வலிமையாய் வாழ்க்கை


நடத்திட முடியும்?


அப்படியென்றால் அந்த மருந்துக்கு என்னதான் பெயர்?