பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 டாக்டர். எஸ். நவராஜ் செல்லைய.


தடுக்கும் மருந்து


இப்படியாக, சீராகவும் சிறப்பாகவும் செயல்படுகிற உறுப்புக்களைச் சிதைவு படுத்துகிற முதுமையின் வேகத்தை, உடற் பயிற்சி என்னும் ஒப்பற்ற மருந்து, தடுத்தாட் கொள் கிறது. தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தித் தந்து தேகத்தை செழுமை படுத்துவதிலும், செப்பனிடுவதிலும் சிரமேற் கொண்டு காரியம் ஆற்றுகிறது.


எப்படி என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிற தல்லவா! இதோ படியுங்கள்.


உடற்பயிற்சியால் இதயத்தில் வலிமை கூடுகிறது. இரத்தத்தை இறைத்து வெளியேற்றும் ஆற்றல் இதயத் திற்கு அதிகமாகிறது.


உடற்பயிற்சிகள் கால்சியச் சத்தினை அதிகமாக்கித் தருவதால், எலும்புகள் உறுதியுடையனவாக மாற்றம் பெறு கின்றன. எலும்புகள் வலிமை பெறுவதால், நிமிர்ந்து நிற்கும் தோரணை முதற்கொண்டு, நிறைவான பல பலன்கள் நிறைந்து வருகின்றன.


இதனால் முதுமையின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டு, இளமையை நீட்டித்து விடும் நேரிய செயல்கள் உடற்பயிற்சிகளால் ஊட்டப்படுகின்றன.


சொல்லிப் பார்க்க சுவையாக இருக்க வேண்டும், என்பதற்காக இந்தப் பகுதி எழுதப்படவில்லை, சோதனை கள் மூலமாகக் கண்டறியப்பட்ட சொக்கத் தங்கமான உண்மைகளாகும் இவை.


வயது 56 முதல் 81 வரையுள்ள வயோதிகர்கள் 200 பேர்களை வரவழைத்து, ஆறுவார காலங்கள் அளவான உடற்பயிற்சிகளைக் கொடுத்து, ஆராய்ச்சி செய்தபோது,